கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலை நீடித்தால் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவு அது குறையும் சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பலவீனம், அமெரிக்க டாலர் வலுவாக இருப்பது ஆகிய காரணங்களினால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு இதுவரை அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் ஏறத்தாழ நான்கு விழுக்காடு குறைந்துள்ளது.
இவ்வாண்டு சிங்கப்பூர் நாணயத்துக்கு எதிராக மலேசிய ரிங்கிட் கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு சரிந்துள்ளது.
சிங்கப்பூர் நாணயத்துக்கு எதிராக 2023ஆம் ஆண்டில் அது 6 விழுக்காடு குறைந்தது.
பிப்ரவரி 19 காலை 10.06 மணி அளவில் S$1க்கு 3.555 ரிங்கிட் என இருந்தது.