நவல்னியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டோர் சிறையில் அடைப்பு

நவல்னியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டோர் சிறையில் அடைப்பு

1 mins read
c8b1b703-998d-4a3e-8cc0-7266a3ba8297
கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டோரை ரஷ்ய நீதிமன்றம், குறுகிய சிறைத்தண்டனை விதித்து காவலில் வைத்துள்ளது.  - படம்: இபிஏ-இஎஃப்இ  

மாஸ்கோ: கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டோரை ரஷ்ய நீதிமன்றம், குறுகிய காலத்துக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டும், 154 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ நீதிமன்ற அறிவிப்புகள் காட்டுகின்றன.

ரஷ்யாவின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதரான கடுமையான சட்டங்களை மீறியதற்கு அந்த 154 பேருக்கு 14 நாள்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நகரின் நீதித்துறை வெளியிட்ட தீர்ப்புகளின் விவரங்கள் காட்டுகின்றன.

வார இறுதியில், ஸ்டாலின் காலத்தில் நடந்த அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச் சின்னங்களில் மலர்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைக்க வந்த நூற்றுக்கணக்கான ரஷ்யர்களைக் காவலர்கள் கைது செய்தனர்.

கிரெம்ளின் எதிர்ப்பு நடவடிக்கைகளும் ஆட்சிக்கு எதிரான பொது நிகழ்ச்சிகளும் ரஷ்யாவின் கடுமையான செய்தித் தணிக்கைச் சட்டங்களுக்கு எதிரானவை.

குறிப்புச் சொற்கள்