ஹாங்காங்: பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹாங்காங்கிற்கு சீனாவைச் சேர்ந்த பல சுற்றுப்பயணிகள் சென்றுள்ளனர்.
சீனப் புத்தாண்டு தொடங்கி அடுத்த எட்டு நாள்களுக்கு 1.2 மில்லியனுக்கும் அதிகமான சீன சுற்றுப்பயணிகள் ஹாங்காங் சென்றதாக ஹாங்காங் அரசாங்கம் பிப்ரவரி 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு 2018ஆம் ஆண்டில் இருந்த நிலையைவிட அதிகம்.
சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள மக்காவ்வுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் 1.4 மில்லியன் சுற்றுப்பயணிகள் சென்றனர்.
இது மக்காவின் சூதாட்டக்கூடங்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது ஷங்காய் நகரில் உள்ள விமான நிலையங்கள் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம் என்று சீன ஊடகம் தெரிவித்தது.

