திருமண நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட குண்டர் கும்பல் தலைவர்

திருமண நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட குண்டர் கும்பல் தலைவர்

1 mins read
86a33f4a-be5a-4a4f-9f61-e904ee30760e
அமீர் பலாஜ் திப்பு. - படம்: இணையம்

லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில், நிழலுலக குண்டர் கும்பல் தலைவரும் சரக்கு வாகனக் கட்டமைப்பின் உரிமையாளருமான அமீர் பலாஜ் திப்பு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுங் வட்டாரத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாக ஆங்கிலமொழி நாளேடான ‘டான்’ தெரிவித்தது.

பலாஜின் தந்தை அரிஃப் அமீர், தாத்தா ஆகியோரும் இதற்கு முன்னர் வன்முறைச் சம்பவங்களில் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக்காரர் பலாஜ் மீதும் மேலும் இரு விருந்தினர் மீதும் சுட்டதில் அவர்கள் படுகாயமடைந்ததாகக் காவல்துறை கூறியது. பலாஜின் பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக பதிலுக்குச் சுட்டதில் துப்பாக்கிக்காரர் மாண்டதாகத் தெரிகிறது.

பலாஜைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியுற்றதாகவும் ஜின்னா மருத்துவமனையில் அவர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல்காரரோ தாக்குதலுக்கான நோக்கமோ இன்னும் அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை தொடர்கிறது.

அமீர் பலாஜ் திப்பு, பாகிஸ்தானில் மிக அதிக செல்வாக்கு உடையராகவும் மிகவும் அஞ்சத்தக்க மனிதராகவும் கருதப்பட்டவர்.

குறிப்புச் சொற்கள்