சிட்னி : ‘சிட்னி ஓபரா ஹவுஸ்’ கலைநிலையத்துக்கு அருகில் இருக்கும் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18), ஒரு மரத்தடியில் தஞ்சம் அடைந்த நால்வர் மின்னலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மரத்தடியில் சிக்கிக்கொண்ட நால்வரும் சிறிது நேரம் சுயநினைவை இழந்தனர் என்றும் அவர்கள் தீக்காயங்களோடும் இதயநோய் அறிகுறிகளோடும் காணப்பட்டனர் என்றும் மீட்புத்துறை அதிகாரிகள் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் ஆண்கள்; இருவர் பெண்கள். சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர்கள் அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகவும் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சிட்னி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

