ஜப்பான் வழங்கும் சிறப்பு ஆறு மாத விசா

ஜப்பான் வழங்கும் சிறப்பு ஆறு மாத விசா

1 mins read
6a287fc5-5a54-49a1-b8ae-1ec501acf94f
இந்த சிறப்பு ஆறு மாத விசா வைத்திருப்பவர்கள் ஜப்பானில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் வசித்து, தொலைதூரத்திலிருந்து வேலை செய்யலாம். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: அலுவலகத்தைத் தவிர்த்து வீடு அல்லது வேறு இடங்களிலிருந்து வேலை செய்வோரை ஜப்பானுக்கு ஈர்க்க அந்நாடு சிறப்பு ஆறு மாத விசாவை அறிமுகப்படுத்துகிறது.

இந்த விசா மார்ச் மாத இறுதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 49 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று ஜப்பான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 10 மில்லியன் யென் (S$90,000) ஆக இருக்க வேண்டும்.

அத்துடன் அவர்களுக்கெனத் தனிப்பட்ட காப்புறுதித் திட்டமும் இருக்க வேண்டும்.

சொந்த தொழில் செய்பவர்களும் மனைவி/கணவர் மற்றும் பிள்ளைகளைக் கொண்டவர்களும் இந்த விசாவுக்குத் தகுதி பெறுகின்றனர்.

இந்த விசா வைத்திருப்பவர்கள் ஜப்பானில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் வசித்து, தொலைதூரத்திலிருந்து வேலை செய்யலாம்.

இருப்பினும், இந்தச் சிறப்பு விசாவை வைத்திருப்பவர்கள் ஜப்பானிய நிரந்தரவாசம் பெற தகுதி பெறுவர் என்றாகிவிடாது.

குறிப்புச் சொற்கள்