அறப்பணிப் பந்தயத்தின்போது மரணமடைந்த நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

அறப்பணிப் பந்தயத்தின்போது மரணமடைந்த நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

1 mins read
e9a53b04-2ce5-4c55-9877-2cc3f62014af
மரணமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் 49 வயது எஃபெசோ கொல்லின்ஸ். - படம்: ஃபனானா எஃபெசோ கொல்லின்ஸ் ஃபேஸ்புக்

வெலிங்டன்: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற அறப்பணிப் பந்தயத்தின்போது அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

பசிபிக் நாடுகளுக்குச் சுத்தமான குடிநீரைக் கொண்டு சேர்க்க இந்த நிதிதிரட்டுப் பந்தயம் நடைபெற்றது.

அதில் 49 வயது திரு எஃபெசோ கொல்லின்ஸ் பங்கேற்றார்.

பந்தயத்தின்போது அவர் மயங்கி விழுந்து மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு கொல்லின்சுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

திரு கொல்லின்சின் மரணம் தமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுஸோன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்