தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்ப உறுப்பினரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 9 வயது சிறுவன் கைது

1 mins read
1532facf-1586-4d13-9714-56ab067534f0
32 வயது ஆடவரின் தலையில் குண்டடிபட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். - படம்: இணையம்

லாஸ் ஏஞ்சலிஸ்: குடும்ப உறுப்பினர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுவனை அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 16ஆம் தேதி மாலை, யூட்டா மாநிலத்தில் 32 வயது ஆடவரை அந்தச் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தை அவசர சேவை அதிகாரிகள் அடைந்தபோது படுகாயம் அடைந்த ஆடவரைக் கண்டனர்.

அவர் தலையில் குண்டடிபட்டிருந்ததாகவும் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.

மாண்ட ஆடவரை இன்னும் அடையாளம் காணவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதையடுத்து, மாண்ட ஆடவரின் குடும்ப உறுப்பினரான 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறுவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்