தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணைக் கைதிகளை விடுவிக்க எந்த விலையும் கொடுக்கமாட்டோம்: இஸ்ரேல் பிரதமர்

1 mins read
6900f11e-305e-4d18-8419-4d8bb8d9b68f
காஸாவில் உள்ள பிணை கைதிகளை மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். - படம்: இபிஏ

ஜெருசலம்: காஸாவின் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை விடுவிக்க இஸ்ரேல் எந்த விலையும் கொடுக்காது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகளுடன் ஒப்பத்தம் ஏற்படுத்திக்கொள்ள எதிர்கட்சிகள், பிணை கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பல தரப்பில் இருந்து அழுத்தம் வருகிறது. போரை நிறுத்தச் சொல்லியும் அழைப்புகள் வருகிறது. ஹமாசின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அது தோற்பதற்கு சமமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹமாஸ் தரப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்தில் நெட்டன்யாகு இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகளின் பிணையில் கிட்டத்தட்ட 134 பேர் உள்ளனர், அவர்களை மீட்பது முக்கியம் ஆனால் அதற்காக அவர்களிடம் அடிபணிந்து போகப் போவதில்லை என்று இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் மோட்ரிக் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் உதவியால் ஹமாஸ் போராளிகளை வீழ்த்தி பிணையில் உள்ளவர்களை மீட்போம் என்றார் அவர்.

கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. அதில் கிட்டத்தட்ட 29,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பல கட்டடங்கள் தரைமட்டமாயின.

போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் கூறிவரும் நிலையில் இஸ்ரேல் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஹமாஸ்