கோலாலம்பூர்: மலேசியாவின் ஊடகத்துறைக்கான நெறிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் புதுப்பிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நெறிமுறைகள் மலேசியாவின் தகவல்துறையால் புதுப்பிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
இத்துறை மலேசியத் தொடர்புதுறை அமைச்சின்கீழ் செயல்படுகிறது.
மலேசிய ஊடக அங்கீகார அட்டைகளை நிர்வகிப்பதற்கு இந்தப் புதிய நெறிமுறைகள் வழிகாட்டியாக இருக்கும் என்று தகவல்துறை கூறியது.
புதிய நெறிமுறைகளை பிப்ரவரி 20ஆம் தேதியன்று மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் அறிமுகப்படுத்தினார்.
சமூக ஊடகத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
பொய்ச் செய்திகள், அவதூறு ஆகியவற்றை எதிர்கொள்ள இந்தப் புதிய நெறிமுறை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் ஊடகம் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இந்த நெறிமுறை பொருந்தும்.
துல்லியமற்ற செய்திகள், ஆதாரமற்ற செய்திகள், வஞ்சகமுள்ள உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் ஆகியவற்றை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று புதிய நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

