அழிக்கப்பட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

அழிக்கப்பட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

1 mins read
c074a74d-e807-4102-915a-89dc2c322dfe
ஆப்கானிஸ்தானில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் புல்டோசரால் அழிக்கப்பட்டுள்ளன என்று சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் - படம்: பிபிசி

ஆப்கானிஸ்தானில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் புல்டோசரால் அழிக்கப்பட்டதாக சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது கடந்த அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட கொள்ளை நடவடிக்கை இன்னும் தொடர்வதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இத்தகைய திட்டமிட்ட கொள்ளையை மேற்கொள்வதற்கு இந்த இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

முந்தைய அரசாங்கத்தின் கீழ் தொடங்கிய கொள்ளை முயற்சிகள், 2021 இல் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்துள்ளது.

இதன் விளைவாக, கி.மு. 1000க்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பழங்கால குடியிருப்புகள் சேதமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான இடங்கள் வடக்கு ஆப்கானிஸ்தானின் பால்க் வட்டாரத்தில் அமைந்திருந்தன. அவை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேக்ட்ரியாவின் மையப்பகுதியாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்