ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உக்ரேனில் ஒருவர் மாண்டார்

ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உக்ரேனில் ஒருவர் மாண்டார்

1 mins read
482e6fb8-46fd-49ff-9733-dd64fa6cb894
படம்: - தமிழ் முரசு

உக்ரேனின் கருங்கடல் துறைமுக நகரான ஒடிசாவின் வர்த்தகப் பகுதியை ரஷ்ய ஆளில்லா வானூர்தி ஒன்று தாக்கியதில் ஒருவர் மாண்டார். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என உக்ரேனிய ராணுவம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்தது.

ஒன்பது ஆளில்லா வானூர்திகளை இடைமறித்ததாகவும், அவற்றில் ஒன்று துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாக்கியதில் தீ மூண்டதாகவும் உக்ரேனிய ராணுவம் கூறியது.

மேலும், தாக்குதலில் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அவை இலக்குகளைத் தாக்கத் தவறியதாகவும் அது தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அவசரகால மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதை  உக்ரேனிய ராணுவம் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன. 

குறிப்புச் சொற்கள்