நாட்டு நுழைவாயில்கள் பராமரிப்பை துரிதப்படுத்துக: அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் வருவோர் பயன்படுத்தும் நுழைவாயில்களின் பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையை எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களின் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்தம்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து விவரித்த அவர், நாட்டின் அனைத்து நுழைவாயில்களும் துடிப்புடன் செயல்படவும் தாவாவ், சாபா, பினாங்கு போன்ற விமான நிலையங்களில் காணப்படும் மக்கள் நெரிசல் போலல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய திரு அன்வார், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய ரயில் சேவை வசதியும் துரிதமாக முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“கோத்தா கினபாலு, கூச்சிங், பினாங்கு, அலோர் ஸ்டார், கோத்தா பாரு விமான நிலையங்களைப் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை, தாவாவ் விமான நிலையத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

“தாவாவ் விமான நிலையம் சிறியது என்று நம் எல்லோருக்கும் தெரியும். அது வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கும் வகையில் கட்டப்படவில்லை. மலேசியா வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை வரவேற்க வேண்டும். அதனால், விமான நிலைய பராமரிப்புப் பணிகள் மூன்று, நான்கு ஆண்டுகள் வரை எடுக்கக்கூடாது,” என்று பிப்ரவரி 24ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய வர்த்தக, தொழில் திறன் காட்சி நிகழ்வில் தெரிவித்தார்.

மலேசியாவின் நிதியமைச்சராகவும் உள்ள திரு அன்வார், பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்த அந்தப்பகுதிகளில் உள்ள அதிகாரிகள், நிதி, போக்குவரத்து அமைச்சுகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று விளக்கினார்.

எனினும், சீரரமைப்புப் பணிகள் அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நினைவுபடுத்தினார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!