தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் விபத்து; சிங்கப்பூரர் மரணம்

1 mins read
15def8ea-745a-4bab-9d93-24987f97a135
24 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சாலைத் தடுப்பின்மீது மோதியது - படம்: இணையம்

சிரம்பான்: மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூரர் ஒருவர் மாண்டார்.

அந்த 24 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சாலைத் தடுப்பின்மீது மோதியது.

விபத்து சிரம்பான்/போர்ட் டிக்சன் நுழைவாயிலுக்கு அருகில் பிற்பகல் 1.20 மணி அளவில் நிகழ்ந்ததாக நெகிரி செம்பிலான் போக்குவரத்துப் புலன்விசாரணை, அமலாக்கத்துறைத் தலைவரான கண்காணிப்பாளர் முகம்மது ஸாக்கி ரஹ்மாட் தெரிவித்தார்.

“அந்த ஆடவர் ஜோகூர் பாருவிலிருந்து வடக்குத் திசை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. காரின் கட்டுப்பாட்டை அவர் இழந்து சாலைத் தடுப்பு மீது மோதியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்த ஆடவர் காருக்குள் மாட்டிக்கொண்டார்,” என்று திரு ஸாக்கி கூறினார்.

ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்