வார்சா: ரஷ்ய எதிர்த்தரப்பு தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நவல்னி கடந்த 16ஆம் தேதி ஆர்க்டிக் சிறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் நவல்னியின் உடலைக் கேட்டு அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு நவல்னியின் உடல் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நவல்னியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படுமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
கடுமையான சிறைகளில் ஒன்றான ஆர்டிக் சிறையில் 47 வயது நவல்னி, சுயநினைவு இழந்து கீழே தடுமாறி விழுந்து மாண்டதாக சிறைத்துறை தெரிவித்தது.
ரஷ்ய அதிபர் புட்டினை கடுமையாக விமர்சனம் செய்தவர் நவல்னி. அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ரஷ்ய நீதிமன்றம்.

