தோக்கியோ: ஜப்பானின் பாரம்பரிய விழாவான ‘ஹடாகா மட்சூரி’யில் முதல்முறையாக பெண்கள் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 1,250 ஆண்டுகள் பழமையான இந்த விழா கோனோமியா வழிபாட்டுத் தளத்தில் நடந்தது. தீமையை அழித்து வாழ்வில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் பெற அந்த ஆலயத்தில் ஆண்கள் வழிபாடு செய்வார்கள்.
விழாவில் ஆண்கள் ஒரு சிறிய ஆடையை மட்டும் அணிந்து வழிபாட்டு தளத்தில் கூட்டமாக சத்தம் எழுப்பியபடி ஓடும் காணொளி சமூக ஊடகத்திலும் காணமுடிந்தது.
இந்த விழாவின் பின்னணியில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும், இப்போது முதல்முறையாக பாரம்பரிய விழாவில் கலந்துகொண்டது மறக்கமுடியாத ஒன்று என்றனர் அதில் கலந்து கொண்ட பெண்கள்.

