குறைந்தபட்சம் $13 மில்லியன் முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்ட சிங்கப்பூர்வாசி ஒருவர், அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முன்பு கூகல் பங்குகளை மோசடியாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார்.
பெரும் பணக்காரர் ஒருவரின் குடும்ப முதலீட்டு அலுவலகத்தின் பிரதிநிதியாக அவர் காட்டிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 22ஆம் தேதி அன்று நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க தலைமைச் சட்ட அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், சிங்கப்பூரில் வசிக்கும் ஷாமூன் ரஃபிக், ‘ஏர்பின்பி’ போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு பெற்றுத் தர முடியும் என்று பொய் சொல்லி முதலிட்டாளர்களின் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

