மலேசியாவின் வட பகுதியில் கடும் வெப்ப அலை: வானிலை மையம்

மலேசியாவின் வட பகுதியில் கடும் வெப்ப அலை: வானிலை மையம்

1 mins read
391b3090-6fad-4e54-afc5-4fb88d459ea8
தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் 37 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருந்தால் ஆரம்பநிலை கடும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: UNSPLASH

பட்டர்வொர்த்: மலேசிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சில இடங்களைக் கடும் வெப்ப அலை வாட்டி வருகிறது.

இந்நிலையில், கடும் வெப்ப அலைக்கான ஆரம்ப நிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை மையம் பிப்ரவரி 25ஆம் தேதியன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெர்லிஸ் மாநிலம்; கெடாவில் உள்ள லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாலிங், சிக், பாடாங் டெராப்; பேராக்கில் உள்ள கோலா கங்சார்; பினாங்கில் உள்ள மத்திய செபராங் பிராய் ஆகிய இடங்களில் ஆரம்பநிலை கடும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் 37 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருந்தால் ஆரம்பநிலை கடும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும் என்று மலேசிய வானிலை மையத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்