பிரான்ஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: நால்வர் மரணம்

பிரான்ஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: நால்வர் மரணம்

1 mins read
25614502-f10f-4c37-a7f6-fdd688544065
கிராமம் ஒன்றுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். - படம்: இணையம்

லியோன்: பிரான்சின் மத்திய பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதியன்று நிகழ்ந்த பனிச்சரிவில் நான்கு பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பனிச்சரிவின் காரணமாக மூவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தேடி, மீட்கும் பணியில் ஏறத்தாழ 50 பேர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிராமம் ஒன்றுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அப்பகுதியில் பனிச்சறுக்கு நிலையம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.

குறிப்புச் சொற்கள்