சிட்னி: பாப்புவா நியூ கினியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி ஒருவரும் இரண்டு பயணிகளும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு விமானியும் அந்த இரு பயணிகளும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளின் வேகமான நடவடிக்கையின் மூலம் கடத்தப்பட்டவர்கள் ஒரு சில மணி நேரத்திலேயே மீட்கப்பட்டனர்.
மவுண்ட் சீசா என்னும் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் அந்த மூவரும் தகவல் தொடர்பு வேலை செய்து கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாப்புவா நியூ கினியின் காவல்துறை தெரிவித்தது.
கடத்தப்பட்ட நபர்களுக்கு எந்தக் காயமும் இல்லை என்றும் அவர்கள் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

