தாக்குதல் நடத்திய உக்ரேன்; மூவர் மரணம்

தாக்குதல் நடத்திய உக்ரேன்; மூவர் மரணம்

1 mins read
b444ff11-bf88-4b26-906b-f2fa635de1bb
படம்: - தமிழ் முரசு

கியவ்: ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில்  வாகனம் ஒன்றின் மீது உக்ரேனிய ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியது. 

தாக்குதலில்,  மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்றும் உக்ரேன் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார்.

அந்த வாகனம், எல்லைக் கிராமமான போச்சேவோவின் புறநகர்ப் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானது.

பெல்கொரோட் பகுதி பல மாதங்களாக உக்ரேனிய எல்லை தாண்டிய தாக்குதல்களின் இலக்காக உள்ளது என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள் என்றும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்