1,500 பேரை ஆட்குறைப்பு செய்யும் ‘எக்ஸ்பீடியா’

1,500 பேரை ஆட்குறைப்பு செய்யும் ‘எக்ஸ்பீடியா’

1 mins read
2c661c8c-fdd8-453e-9a87-b6d6e05b8659
பயண நிறுவனமான ‘எக்ஸ்பீடியா’ குழுமம், பிப்ரவரியில் அதன் தலைமை மாற்றத்தை அறிவித்த பிறகு, சுமார் ஒன்பது விழுக்காடு பணியாளர்களை நீக்குகிறது என்று கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க் : பயண நிறுவனமான ‘எக்ஸ்பீடியா’ குழுமம், பிப்ரவரியில் அதன் தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்த பிறகு, ஏறக்குறைய ஒன்பது விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருக்கிறது. 

நிறுவன வளர்ச்சிக்கான முக்கிய உத்திபூர்வ முதலீட்டுக்காக உலகெங்கிலும் உள்ள ஏறத்தாழ 1,500 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், ஆட்குறைப்பு பற்றிய அறிவிப்பை திங்கட்கிழமை  (பிப்ரவரி 26) முதல் பெறத் தொடங்கினர். 

ஆக முக்கியமான வேலைக்கு முன்னுரிமை கொடுப்பதை உறுதிசெய்ய அந்நிறுவனம் வளங்களைச் சரியாக ஒதுக்கும் முறையைத் தொடர்ந்து மதிப்பிடும் என்று கூறப்படுகிறது.

சென்ற ஆண்டிறுதி நிலவரப்படி உலகின் 50க்கு மேற்பட்ட நாடுகளில் 17,100 பேரை ‘எக்ஸ்பீடியா’ பணியமர்த்தியிருந்தது. அவர்களில் பாதிப் பேர் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் இருந்தனர்.

கடந்த ஈராண்டுகளாக தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்திய நிறுவனம் இந்த ஆண்டு, அதன் விற்பனையை அதிகரிக்க முன்னுரிமை அளிப்பதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்