பிரபல பிரெஞ்சு நடிகரின் வீட்டில் 72 துப்பாக்கிகள் பறிமுதல்

பிரபல பிரெஞ்சு நடிகரின் வீட்டில் 72 துப்பாக்கிகள் பறிமுதல்

1 mins read
c40dcc44-e400-44a4-8b1b-277725290468
2019ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் பிரெஞ்சு நடிகர் அலெய்ன் டெலோன். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பாரிஸ்: பிரபல பிரெஞ்சு நடிகரான அலெய்ன் டெலோனின் விட்டில் காவல்துறையினர் 72 துப்பாக்கிகளையும் 3,000க்கும் அதிகமான குண்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெலோனின் வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் கூடமும் காணப்பட்டது. அவரிடம் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் கிடையாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

88 வயது டெலோன், ‘தி சமுராய்’, ‘பொர்சலினோ’ போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்தவர். கம்பீரமான தோற்றத்துக்குப் பெயர் போன அவர், பிரெஞ்சு திரையுலகின் பொற்காலத்தில் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.

நீதிமன்றம் நியமித்த அதிகாரி ஒருவர் டெலோனின் வீட்டில் ஓர் ஆயுதம் இருப்பதைக் கண்டு நீதிபதியிடம் தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்று (27 பிப்ரவரி) அவரின் வீட்டில் தேடல் இடம்பெற்றது.

2019ல் பக்கவாதத்துக்கு ஆளான டெலோன் வேறொரு மோசமான உடல்நலப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் குறிப்பிட்டன. அண்மைய ஆண்டுகளில் அவரின் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டெலோனின் குடும்பத்தில் விரிசல்கள் தென்பட்டதாகவும் பிரான்சில் பேசப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்