தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரிய குழந்தைப் பிறப்பு விகிதத்தின் சரிவு தொடர்கிறது

1 mins read
0bb6fd12-bcf2-4c37-9c8f-d37868813451
தென்கொரியாவில் பெண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கருவை உறைய வைக்கும் முன்பு குழந்தைப் பிறப்பு ஆராய்ச்சிக்கூடத்தின் ஆராய்ச்சியாளர் அதைப் பரிசோதிக்கிறார். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் உலகிலேயே ஆகக் குறைவானது.

இந்நிலையில், அதன் குழந்தைப் பிறப்பு விகிதத்தின் சரிவு தொடர்கிறது.

தென்கொரியப் பெண்கள் வேலையிடங்களில் பதவி உயர்வு பெறுவதில் கவனம் செலுத்துவதாகவும் பிள்ளைகளை வளர்க்க ஏற்படும் செலவுகள் குறித்து அக்கறை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனால் அவர்களில் சிலர் குழந்தைகளே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

சிலர் குழந்தை பெற்றெடுப்பதை ஒத்திவைத்துள்ளனர்.

2024ஆம் ஆண்டிலும் அதன் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையும் என்று தென்கொரியா இதற்கு முன்னதாக முன்னுரைத்திருந்தது.

தென்கொரியாவிலேயே அதன் தலைநகர் சோலில் வீடுகளின் விலை ஆக அதிகமானது. சோலில் 2023ஆம் ஆண்டில் ஆகக் குறைவான குழந்தைப் பிறப்பு விகிதம் பதிவானது.

மூப்படையும் மக்கள்தொகை பிரச்சினையையும் தென்கொரியா எதிர்நோக்குகிறது.

இதே பிரச்சினை அண்டை நாடான ஜப்பானுக்கும் உள்ளது.

ஜப்பானில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்தது.

சீனாவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 2022ஆம் ஆண்டில் மிகக் குறைவான குழந்தைப் பிறப்பு விகிதம் பதிவானது.

குறிப்புச் சொற்கள்