பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்

பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்

1 mins read
e726ee24-4c8a-46a3-88ae-e409df0b0c89
‘பூட்ஸ்’ காலணி, சுத்தியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமது 55 வயது தாயாரை 33 வயது ஆடவர் அடித்துக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஷா அலாம் காவல்துறை

கிள்ளான்: பெற்ற தாயை ‘பூட்ஸ்’ காலணி, சுத்தியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் நகரில் பிப்ரவரி 28ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

தமது 55 வயது தாயாருடன் அந்த 33 வயது ஆடவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தாயாரை அடித்துக் கொன்ற பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஷா அலாம் காவல்துறை ஆணையர் முகம்மது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் போதைப்பொருள் புழங்கியிருந்தது தெரியவந்தது.

இதற்கு முன்பு அவர் போதைப்பொருள் குற்றங்கள் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்று ஷா அலாம் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்