பிப்ரவரி 29 பிரச்சினை; நியூசிலாந்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் சிக்கல்

பிப்ரவரி 29 பிரச்சினை; நியூசிலாந்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் சிக்கல்

1 mins read
a8dcd917-0669-41e7-bf60-7e41fd3442c8
தலைநகர் வெலிங்டனில் சில பெட்ரோல் நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டன. - படம்: UNSPLASH

வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் பயன்படுத்தும் மென்பொருளால் பிப்ரவரி 29ஆம் தேதியை உணரமுடியாமல் போனதை அடுத்து, வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நியூசிலாந்தெங்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் வெலிங்டனில் சில பெட்ரோல் நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டன.

தானியங்கி பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாமல் போனதாகவும் ஊழியர்களால் நிரப்பப்படும் பெட்ரோலுக்கு மட்டுமே பணம் வசூலிக்க முடிந்ததாகவும் நியூசிலாந்தில் பெட்ரோல் நிலையங்களை நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்