பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதை 2024 இறுதிக்குள் தடைசெய்ய தாய்லாந்து முடிவு

பேங்காக்: 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் பொழுதுபோக்குக் காரணங்களுக்காகக் கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தாய்லாந்து தடை செய்யும் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் சோல்னன் ஸ்ரீகேவ் புதன்கிழமை (பிப்ரவரி 28) ராய்ட்டர்சுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாடு தொடர்ந்து அனுமதிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2018ஆம் ஆண்டுத் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை மருத்துவக் காரணங்களுக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்த முதல் நாடாகத் தாய்லாந்து ஆனது.

மேலும், அந்நாடு பொழுதுபோக்கிற்காகக் கஞ்சாவைப் பயன்படுத்த 2022ஆம் ஆண்டு அனுமதி அளித்தது.

இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டுக்குள் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் ( S$1.6 பில்லியன்) வர்த்தகத்தில் பங்கெடுக்க ஆயிரக்கணக்கான கஞ்சா கடைகள் முளைக்கும் என முன்னுரைக்கப்பட்டது.

கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இதனால், அதைக் கட்டுப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டது. அதற்காக வரைவு மசோதா ஒன்றை உருவாக்கியது.

வரைவு மசோதா இவ்வாண்டு மார்ச் மாதம் அந்நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் இவ்வாண்டு இறுதிக்குள் அது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் திரு சோல்னன் ஸ்ரீகேவ் கூறினார்.

“சட்டம் இயற்றவில்லை என்றால் கஞ்சாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது,”எனப் பொழுதுபோக்கிற்காகத் தாய்லாந்தில் கஞ்சா பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“கஞ்சாவின் தவறான பயன்பாட்டால் தாய்லாந்து நாட்டுச் சிறார் பாதிக்கப்படுகின்றனர். இதை இப்படியே விட்டுவிட்டால் கால ஓட்டத்தில் மற்ற போதைப்பொருள்களும் தாய்லாந்துக்குள் வர இது வழிவகுக்கும்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!