தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எரிமலை பேரிடரில் 22 பேர் உயிரிழந்த சம்பவம்; $8.2 மி. இழப்பீடு வழங்க உத்தரவு

1 mins read
4a29f3c9-2199-4cda-ae76-5b5f5f28860e
2019 டிசம்பர் 15ஆம் தேதி தேடி, மீட்கும் பணியில் ஈடுபட்ட நியூசிலாந்து அதிகாரிகள் திரும்புகின்றனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டில் 22 உயிர்களைப் பலிவாங்கிய எரிமலை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மார்ச் 1ஆம் தேதி அன்று பத்து மில்லியன் நியூசிலாந்து டாலர் (S$8.2 மில்லியன்) இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

எரிமலை வெடித்த நாளான டிசம்பர் 9, 2019 அன்று 47 சுற்றுலாப் பயணிகளை எரிமலைத் தீவுக்கு அழைத்துச் சென்ற ஐந்து நிறுவனங்கள் இந்த தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிர்பிழைத்த 25 பேர் கடுமையான தீக்காயம் அடைந்தனர்.

ஒயிட் ஐலாண்ட் டூர்ஸ், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் வோல்கானிக் ஏர் சஃபாரிஸ் எனும் ஹெலிகாப்டர் நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்த்து தீவின் உரிமையாளரான வக்காரி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் எரிமலைகளை கண்காணிக்கும் ஜிஎன்எஸ் சயின்ஸ் என்ற நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி இவாஞ்சலோஸ் தாமஸ், பேரிடரால் ‘உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியாக’ சுற்றுலாக் குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்னமும் ஆறாத வடுக்களை அவர்கள் சுமக்கின்றனர். இந்த இழப்பீட்டுத் தொகை ஒரு சிறிய ஆறுதல் மட்டுமே, பாதிக்கப்போட்டோரின் வேதனைக்கு ஈடல்ல என்றார்  என்றார் அவர்.

இந்தப் பேரிடர் சம்பவத்துக்குப் பிறகு எரிமலைத் தீவுக்கு படகோ, விமான சுற்றுலாவோ அனுமதிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்