தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை மாற்றத்தால் யானைகள் இளம் வயதிலேயே இறக்கக்கூடும்: ஆய்வு

1 mins read
d348f899-5597-48df-a20d-7a8157f48a8a
பருவநிலை மாற்றத்தால் யானைகளின் வாழிடத்தின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பருவநிலை மாற்றத்தின் விளைவாக மூப்படைந்த ஆப்பிரிக்க யானைகள் அகால மரணம் அடைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

அதிகரித்துவரும் வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணங்களால் யானகள் உண்ணும் உணவுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் இதனால், 40 வயதுக்கு மேற்பட்ட யானைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன என்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் விருங்கா பகுதியிலிருந்து 50 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு தெரிவித்தது.

யானைகளின் வாழிடங்கள் குறைந்து வருவதால் யானைகள் மனிதர்களுடன் சண்டையிடும் சூழல் அதிகரிக்கும் என்றும் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படும் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்