தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவியைக் கொன்ற கணவன்; உடலை 4 நாள்களுக்கு வைத்திருந்தார்

1 mins read
eb3bcda0-6a76-4d95-a58b-88756163e61d
பரத் சிங், 55, தமது மனைவி சுனிதாவைக் கொலை செய்த சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். - படம்: இணையம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள தமது இல்லத்தில் 55 வயது ஆடவர் ஒருவர் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் மனைவியைக் கொன்ற பிறகு, உடலை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே வைத்திருந்தார். துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், பரத் சிங் என்ற அந்த ஆடவர் அலறிக்கொண்டே தாம் தமது மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், காவல்துறையினரை அழைக்கும்படியும் தமது அண்டைவீட்டாரைக் கேட்டுக்கொண்டார்.

“பரத் அவரது மனைவி சுனிதாவை நெரித்துக்கொன்றதாக அண்டைவீட்டார் நம்மிடம் தெரிவித்தனர்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி நரேஷ் குமார் கூறினார்.

“நாங்கள் அந்த இடத்தைச் சென்றடைந்ததும் சுனிதாவின் உடலைக் கண்டோம். கொலை நடந்து மூன்று நாள்களானது போல் தெரிந்தது. கணவரைக் கைது செய்துள்ளோம்.

“குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியைக் கொன்றதாக விசாரணையின்போது பரத் நம்மிடம் கூறினார். சுனிதாவின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்துவிட்டோம். உடலை உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்,” என்று திரு நரேஷ் கூறினார்.

விசாரனை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்