வாஷிங்டன்: 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு வாக்களித்தோரில் பெரும்பாலானோர் அவருக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது என்றும் வயது காரணமாக அவரால் முழு ஆற்றலுடன் செயல்படுவது சிரமம் என்றும் தெரிவித்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியேனா கல்லூரி நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
முதுமை காரணமாக அதிபர் பைடனால் தமது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாது என்றும் அதனால் நாட்டைச் செவ்வனே ஆட்சி செய்வதில் அவருக்குச் சிரமம் ஏற்படக்கூடும் என்றும் ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஏறத்தாழ 61 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதிபர் பைடனுக்கு 81 வயதாகிறிது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக திரு பைடன் மிகச் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் அதற்கு அவரது வயது தடையல்ல என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

