தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது; முகைதீனுக்குப் பின்னடைவு

1 mins read
a77dac05-b8f2-46de-8612-ab79b50347a3
முன்னாள் மலேசியப் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் (நடுவில்). - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் தொடர்பான 232.5 மில்லியன் ரிங்கிட் (S$66.11 மில்லியன்) ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து திரு முகைதீன் கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திடம் திரு முகைதீன் மேல்முறையீடு செய்ய முடியாது என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

திரு முகைதீன் தொடர்பான இந்த வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியதால் மேல்முறையீட்டுக்கான ஆக உயரிய அதிகாரம் மேல்முறையீடு நீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

76 வயது திரு முகைதீன் மலேசியாவின் பிரதமராக இருந்தபோது அப்பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மூன்று நிறுவனங்களிடமிருந்து 232.5 மில்லியன் ரிங்கிட் (S$66.11 மில்லியன்) லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்