34,000க்கும் அதிகமான ‘பிக் மெக்’ பர்கர்களைச் சாப்பிட்டு சொந்த சாதனையை முறியடித்த ஆடவர்

1 mins read
8dd470fa-f7ed-4bc4-bf94-7604e6d26c01
ஆக அதிகமான ‘பிக் மேக்’ பர்கர்களைச் சாப்பிடுவதால் தமது உடல்நலத்தைப் பேணிக் காக்க அவர் ‘பிரெஞ்ச் ஃபிரைஸ்’ எனும் பொரித்த உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை. அத்துடன் தினந்தோறும் 9 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். - படம்: கின்னஸ் உலகச் சாதனைப் பதிவுகள்

நியூயார்க்: தமது வாழ்நாளில் மற்றவர்களைவிட அதிகமாக 34,000க்கும் மேற்பட்ட ‘பிக் மேக்’ பர்கர்களைச் சாப்பிட்டு சாதனைப் படைதுள்ளார் 70 வயது அமெரிக்கரான திரு டோனல்ட் கோர்ஸ்கி.

2023ஆம் ஆண்டில் 728 ‘பிக் மேக்’ பர்கர்களைச் சாப்பிட்டு இதற்கு முன்பு தாம் படைத்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

அவர் மொத்தம் 34,128 ‘பிக் மேக்’ பர்கர்கள் சாப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்பு, நாளுக்கு ஒன்பது ‘பிக் மேக்’ பர்கர்களை திரு கோர்ஸ்கி சாப்பிட்டார். தற்போது மதிய உணவின்போது ஒன்று, இரவு நேர உணவின்போது ஒன்று என நாளுக்கு இரண்டு ‘பிக் மேக்’ பர்கர்கள் மட்டுமே அவர் சாப்பிடுகிறார்.

திரு கோர்ஸ்கிக்கு உடல்நலப் பிரச்சினை ஏதும் இல்லை.

ஆக அதிகமான ‘பிக் மேக்’ பர்கர்களைச் சாப்பிடுவதால் தமது உடல்நலத்தைப் பேணிக்காக்க அவர் ‘பிரெஞ்ச் ஃபிரைஸ்’ எனும் பொரித்த உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை.

அத்துடன் தினந்தோறும் 9 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்.

1972ஆம் ஆண்டிலிருந்து ‘பிக் மேக்’ பர்கர்களை முன்னாள் சிறை அதிகாரியான திரு கோர்ஸ்கி விரும்பி சாப்பிடுகிறார்.

அப்போதிலிருந்து தாம் சாப்பிட்டு வரும் ‘பிக் மேக்’ பர்கர்கள் ஒவ்வொன்றுக்குமான ரசீதுகளை அவர் இன்னும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்