தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழலில் ஈடுபட்டதாக ஜோகூர் பாருவில் மூன்று குடிநுழைவு அதிகாரிகள் கைது

1 mins read
15224245-65e0-43ae-8b52-e1f6353e1c19
வெளிநாட்டவர்களிடம் லஞ்சம் வாங்கி மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய அதிகாரிகள் உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது.  - படம்: இணையம்

ஜோகூர் பாரு: வெளிநாட்டவர்களிடம் லஞ்சம் வாங்கி மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய ஐவர் உதவியதாக நம்பப்படுகிறது.

இந்த ஐவரும் ஜோகூர் பாருவில் மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் மூன்று குடிநுழைவு அதிகாரிகளும் அடங்குவர்.

கைதானவர்களில் ஒருவர் பெண்.

அவர் கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவரின் மனைவி என்று தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மாலை 5 மணிக்கும் இரவு 11 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் அந்த ஐவரும் ஜோகூரின் லார்க்கின் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

சினாய் அனைத்துலக விமான நிலையத்தில் சோதனை நடத்தியபோது அந்த மூன்று அதிகாரிகளும் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி குற்றம் புரிந்தது வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்