ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு மகனைப் பறிகொடுத்த ஒரு தந்தையின் குமுறல்

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு மகனைப் பறிகொடுத்த ஒரு தந்தையின் குமுறல்

1 mins read
2c7cfa84-7638-46b9-8aef-86dfc31b5415
தன் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லும் ஒரு தாய். - படம்: ஏஎஃப்பி

ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழப்பு ஆகியவை காரணமாக அண்மையில் தனது மகன் அலியைப் பறிகொடுத்தார் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு தந்தை.

“போர்க்காலத்தில் பிறந்தவன் அலி. அவனுக்கும் அவனுடைய அம்மாவுக்கும் சாப்பிட உணவே இல்லை. இதனால், என் மகனின் சிறுநீரகங்கள் செயலிழந்தன,” என்று பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார் .

தென்காஸாவில் குழந்தைகளுக்காக உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற சிறுவர்களுக்காக இந்தத் தந்தை உதவி கோரி முறையிட்டுள்ளார்.

“அலியின் வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமடைந்தது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. ஒட்டுமொத்த உலகமும் அவனது மரணத்தைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது,” என்றார் அந்த ஆடவர்.

உலகச் சுகாதார நிறுவனம் கடந்த வார இறுதியில் கமல் அத்வான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அலியுடன் குறைந்தது 10 சிறுவர்கள் உணவின்றி இறந்துபோனதைக் கண்டறிந்தனர்.

அந்தப் பகுதியில் கடந்த வாரம் முதல் இதுவரை 18 சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழப்பு காரணமாக இறந்துவிட்டனர் என்று காஸாவின் ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்காகத் தற்போது சிகிச்சை பெற்றுவரும் ஆறு சிசுக்களும் மாண்டு போகக்கூடும் என்று அது அச்சம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்