தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைப் பராமரிப்பு நிலையத்திற்கு சென்ற முதல் நாளே சிசு இறந்தது

1 mins read
a4d78302-2a6f-4973-9670-2afcfcfcacec
உடலில் காயங்கள் ஏதுமில்லை என்று உறுதிசெய்யப்பட்டது. - படம்: பிக்சாபே

ஷா அலாம்: மலேசியாவின் செட்டியா அலாம் பகுதியிலுள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்ட முதல் நாளன்று மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டது.

குழந்தையின் தந்தை மார்ச் 4ஆம் தேதி காலை 8.30 மணிக்குக் குழந்தையை, பராமரிப்பு நிலையத்தில் சேர்த்ததாகவும் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து குழந்தை பேச்சுமூச்சின்றி இருப்பது குறித்து குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் மேலாளர் அந்தத் தந்தைக்குத் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.

ஷா அலாம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்துவிட்டது.

குழந்தையின் உடலில் காயங்களோ வேறு உள்காயங்களோ இல்லை என்று கண்டறியப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்