தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெர்லிஸ் மாநிலத்தின் கடைசி அதிர்‌ஷ்ட குலுக்கல் கடை மூடப்பட்டது

1 mins read
bf4f6cde-9670-4a60-92e3-1a68f6deb5d7
கோப்புப்படம்: - ஊடகம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் கடைசி அதிர்‌ஷ்ட குலுக்கல் கடை மார்ச் 6ஆம் தேதியுடன் மூடப்பட்டது.

இதன் மூலம் மலேசியாவில் சூதாட்டம் இல்லாத நான்காவது மாநிலமாக பெர்லிஸ் மாறியுள்ளது.

தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள பாடாங் பெசார் நகரில் உள்ள ‘டா மா காய்’ கடையின் உரிமம் மார்ச் 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அந்தக் கடை மூடப்பட்டது.

இதற்கு முன்னர் பெர்ஸிஸ் மாநிலத்தில் 6 அதிர்‌ஷ்ட குலுக்கல் கடைகள் இருந்தன. அவற்றின் உரிமத்தை அரசாங்கம் புதுப்பிக்காது என்று அறிவித்தது. அதனால் அவை 2023 ஆண்டில் கட்டங்கட்டமாக மூடப்பட்டன.

சூதாட்ட கடைகள் மூடப்படுவதால் பொருளியல் ரீதியாக இழப்புகள் இருக்கிறது. இருப்பினும் சமூக நலன் கருதியும் பொதுமக்களின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.

மலேசியாவின் கிளந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் சூதாட்ட கடைகள் இல்லை.

கிளந்தான் மாநிலத்தில் 1990 ஆண்டு முதலும் திரங்கானுவில் 2020ஆம் ஆண்டு முதலும் சூதாட்ட கடைகள் இல்லை. கெடா மாநிலம் கடந்த ஆண்டு தடை விதித்தது.

குறிப்புச் சொற்கள்