தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு முறை திருமணமானவருக்கு 92 வயதில் மீண்டும் நிச்சயதார்த்தம்

1 mins read
3245137a-008e-4cfd-af3c-16cd967d389b
திரு முர்டோக் இதற்கு முன்பு நான்கு முறை திருமணம் செய்துகொண்டவர். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ஊடகத்துறை ஜாம்பவான் ரூபர்ட் முர்டோக்கிற்கு வயது 92 என்றாலும், காதலை அவர் கைவிடுவதாகத் தெரியவில்லை.

தம் காதலி எலினா ஸுகோவாவை வரும் ஜூன் மாதம் மணக்க தாம் திட்டம் கொண்டுள்ளதாக அவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

திரு முர்டோக் இதற்கு முன்பு நான்கு முறை திருமணம் செய்துகொண்டவர்.

ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஸுகோவா, 67, திரு முர்டோக்கை விட 25 வயது இளையவர்.

வானொலிப் படைப்பாளர் ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக 2023ல் திரு முர்டோக் அறிவித்திருந்தார். ஆனால், அதிலிருந்து ஒரு மாதத்திற்கு உள்ளாகவே திருமணத்தை ரத்துசெய்ய அவர்கள் முடிவெடுத்துவிட்டனர்.

திரு முர்டோக்கின் கடைசி திருமணம், அமெரிக்க அழகி ஜெரி ஹாலுடன் நடந்தது.

திரு முர்டோக்கிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். ஆஸ்திரேலிய விமானச் சிப்பந்தி பெட்ரிஷா பூக்கரை திரு முர்டோக் முதலில் மணந்திருந்தார். 1960களின் பிற்பகுதியில் அவர்கள் மணமுறிவு செய்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்