ஆஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த இந்திய வம்சாவளிப் பெண் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த இந்திய வம்சாவளிப் பெண் உயிரிழப்பு

1 mins read
3ec4a092-a769-41cf-9e2b-3f156e41df85
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டார் உஜ்வலா வேமுரு. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

விஜயவாடா: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம், லமிங்டன் தேசிய பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைப்பயணம் சென்றபோது நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த 23 வயது இந்திய வம்சாவளிப் பெண் உயிரிழந்தார்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உஜ்வலா வேமுரு, ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள பாண்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவப் பட்டக்கல்வியை முடித்தார்.

அவருடைய பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் குடியேறினர். தாம் ஆஸ்திரேலியாவில் பிறந்திருந்தாலும், ஆந்திராவில் உள்ள வேர்களுடன் தொடர்பை உஜ்வலா கட்டிக்காத்தார்.

குறிப்புச் சொற்கள்