மூன்றே மாதங்களில் US$40 பில்லியன் இழந்த செல்வந்தர்

மூன்றே மாதங்களில் US$40 பில்லியன் இழந்த செல்வந்தர்

1 mins read
a415ca20-8d3f-4d56-b3ee-150d15d714f1
டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை இவ்வாண்டு கிட்டத்தட்ட 29 விழுக்காடு குறைந்ததே திரு மஸ்கின் சொத்து மதிப்பு சரிந்ததற்கு முதன்மைக் காரணம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத் தலைமை நிர்வாகி எலன் மஸ்கின் சொத்து மதிப்பு, இவ்வாண்டு தொடங்கி மூன்றே மாதங்களில் கிட்டத்தட்ட 40 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துவிட்டது.

புளூம்பெர்க் பெருஞ்செல்வந்தர்களின் குறியீட்டின்படி, ‘எக்ஸ்’ சமூக ஊடக உரிமையாளருமான அவரது சொத்து மதிப்பு இப்போது $189 பில்லியன்.

திரு மஸ்க், பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் நிலையில் லூயி விட்டோன் உரிமையாளர் பெர்னர்ட் ஆர்னல்டும் இரண்டாம் நிலையில் அமேசானின் ஜெஃப் பெஸோசும் உள்ளனர்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை இவ்வாண்டு கிட்டத்தட்ட 29 விழுக்காடு குறைந்ததே திரு மஸ்கின் சொத்து மதிப்பு சரிந்ததற்கு முதன்மைக் காரணம்.

ஏற்கெனவே டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் தளத்தை 2022ல் திரு மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து, அவருக்குத் தலைவலி அதிகரித்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விளம்பரதாரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் எக்ஸ் தடுமாறி வருகிறது.

குறிப்புச் சொற்கள்