ஜோகூரில் மலிவு விலையில் நோன்புப் பெருநாள் ஆடைகள்

1 mins read
3ab57abf-52c8-4b38-8092-d949f6f8d76e
அங்சானா ஜோகூர் பாரு கடைத்தொகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள். - படம்: த ஸ்டார்/ ஏஷியா நியூஸ் நெட்வொர்க்.

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள ஆடை விற்பனைக் கடைகள் நோன்புப் பெருநாள் ஆடைகளை மலிவான விலையில் விற்பனை செய்கின்றன.

பிப்ரவரியில் அரசாங்க ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் (S$570) ஊக்கத் தொகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பலரும் முன்கூட்டியே நோன்புப் பெருநாள் தொடர்பில் பொருள் வாங்கத் தொடங்கிவிட்டனர் என்று அங்சானா மலாய் வர்த்தகர்கள் சங்கம் கூறியது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மக்கள் நோன்புப் பெருநாள் ஆடைகளை ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பே வாங்குகின்றனர். இந்த ஆண்டு, வர்த்தகர்களும் சென்ற ஆண்டு விற்காமல் தங்கிவிட்ட ஆடைகளை 30 ரிங்கிட் முதல் 50 ரிங்கிட் வரையிலான விலைக்கு விற்பனை செய்கின்றனர் என்று சங்கம் குறிப்பிட்டது.

நோன்புப் பெருநாளுக்கு இரண்டு வாரங்கள் முன்பாக வர்த்தகர்கள் சிறப்பு விலைக்கழிவுகளை வழங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் மார்ச் 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

விற்பனையாகாமல் கடையில் வைத்திருப்பதைக் காட்டிலும் தேவைப்படுவோருக்குக் குறைந்த விலையில் விற்க முற்படுகின்றனர் கடைக்காரர்கள்.

மக்கள் இந்த ஆண்டு முன்கூட்டியே பொருள்களை வாங்கத் தொடங்கிவிட்டதால் விலைக்கழிவை முன்கூட்டியே அறிவித்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்