தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்டம் கண்ட விமானம்; குறைந்தது 50 பேர் காயம்

1 mins read
7cfe6a2f-8fb3-4f47-96ff-42a1db4b1b69
2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட லதம் ஏர்லைன்ஸ் விமானத்தின் படம். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து ஆக்லாந்து சென்ற லதம் விமான நிறுவனத்தின் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ஆட்டங்கண்டது. இதனால் அவ்விமானத்தில் பயணித்த குறைந்தது 50பேருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவ்விமான நிறுவனம் நியூசிலாந்து ஹெரால்ட் நாளிதழிடம் தெரிவித்தது.

இச்சம்பவம் திங்கட்கிழமை ( மார்ச் 11) நடந்தது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் சிலரும் விமான சிப்பந்திகள் சிலரும் பாதிக்கப்பட்டதாக ‘சவுத் அமெரிக்க ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக அந்நாளிதழ் கூறியது.

மேலும், இதுகுறித்து அவர் வேறு எந்த விரிவான தகவல்களும் தெரிவிக்கவில்லை என்றும் அது சொன்னது.

ஆக்லாந்து விமான நிலையத்தில் ஹாடோ ஹோன் செயின்ட் ஜான் அவசர உதவி வாகனத்தின் உதவியோடு கிட்டத்தட்ட 50 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்களின் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பேச்சாளர் ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விமானம்விபத்து