நியூயார்க்: அமெரிக்காவின் மான்ஹாட்டனில் கடந்த சனிக்கிழமை ரயில் மோதிய விபத்தில் 29 வயது பெண் ஒருவர், தம் இரு கால்களை இழக்க நேரிட்டது.
வாக்குவாதம் காரணமாக அவருடைய காதலர் அவரைத் தண்டவாளத்தில் தள்ளிவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஃபுல்டன் ஸ்திரீட் ரயில் நிலையத்தில் அந்த மாதைத் தள்ளிவிட்டதற்காக கிறிஸ்டியன் வால்டேஸ் என்பவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இச்சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த அந்தப் பெண் சுயநினைவுடன் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது கால்கள் துண்டிக்கப்பட்டதாகக் காவல்துறையினரும் சட்ட அமலாக்க அதிகாரி ஒருவரும் தெரிவித்தனர்.
மாது ஒருவரையும் அவருடைய பிள்ளையையும் தாக்கியதற்காக வால்டேஸ் ஏற்கெனவே சிறைத் தண்டனையை அனுபவித்து இருந்தார்.