தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரிய மருத்துவப் பேராசிரியர்கள் மிரட்டல்

1 mins read
f87a1999-1200-41c8-afe3-fd7c2de66925
போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் கொரிய அரசாங்கம் கூறியுள்ளது. - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரமாகி வரும் நேரத்தில் அவர்களின் போராட்டத்தில் மருத்துவ பேராசிரியர்கள் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் முக்கியமான பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ பேராசிரியர்கள் அடுத்த வாரம் ஒன்று திரண்டு பெரிய அளவில் பணியில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் அவர்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று தென்கொரிய அரசாங்கம் கேட்டு வரும் நேரத்தில் மருத்துவ பேராசிரியர்களிடம் இருந்து புது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீதும் வேலையில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் கொரிய அரசாங்கம் கூறிவரும் நிலையில் பேராசிரியர்களின் அறிவிப்பு சோலுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்