புட்டின்: அமெரிக்க அதிபருடன் ர‌ஷ்யா இணைந்து செயல்படும்

புட்டின்: அமெரிக்க அதிபருடன் ர‌ஷ்யா இணைந்து செயல்படும்

1 mins read
58bab5b1-f8e8-4e58-a310-a69c68d416ee
 ர‌ஷ்ய அரசாங்க தொலைக்காட்சிக்கு நேர்கானல் தரும் அதிபர் விலாடிமிர் புட்டின். - படம்: இபிஏ

மாஸ்கோ: ர‌ஷ்யா எந்த நாட்டு தேர்தலிலும் தலையிடாது என்று அந்நாட்டு அதிபர் விலாடிமிர் புட்டின் மார்ச் 13ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபருடன் ர‌ஷ்யா இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

உக்ரேனுடனான போர், ர‌ஷ்யா விண்வெளியில் அணு ஆயுதம் வைக்க திட்டமிடுகிறது என்று அமெரிக்காவின் குற்றச்சாட்டு போன்றவை மாஸ்கோவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக புட்டின் குறிப்பிட்டார்.

ர‌‌ஷ்யாவின் இறையான்மைக்கு அச்சுற்றுதல் ஏற்பட்டால் அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்காது அதனால் நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்போம் என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு, வளர்ச்சி, போர், அரசியல் என பல்வேறு துறைகள் தொடர்பாக ர‌ஷ்ய அரசாங்க தொலைக்காட்சிக்கு நேர்கானல் தரும்போது மேலுள்ள கருத்துகளை புட்டின் சொன்னார்.

கடந்த மாதம் திரு புட்டின், அமெரிக்க அதிபாராக ஜோ பைடன் வருவது தமது விருப்பம் என்று கூறியிருந்தார். “திரு பைடன் அதிக அனுபவம் கொண்டவர் அவர் எப்போது என்ன செய்வார் என்பதை புரிந்துகொள்ள முடியும்,” என்று புட்டின் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாபுட்டின்