வளர்ச்சி பாதைக்குத் திரும்பிய இங்கிலாந்து பொருளியல்

லண்டன்: இங்கிலாந்து பொருளியல் இவ்வாண்டுத் தொடக்கத்தில் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது. கடந்த ஆண்டின் பிற்பாதியில் மந்தநிலைக்குச் சென்ற அந்நாட்டின் பொருளியல் தற்போது மீட்சி கண்டு மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகிறது.

இங்கிலாந்தில் இவ்வாண்டு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்னதாக அந்நாடு மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக்குச் சற்று ஆறுதல் அளித்ததுள்ளது.

“ஜனவரி மாதத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை துறையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி காரணமாக பொருளியல் அதிகரித்தது. அதே நேரம் கட்டுமானத்துறையும் சிறப்பாகச் செயல்பட்டது. கடந்த ஆண்டு சற்று சரிவைக் கண்ட கட்டுமானத் துறையால் வீடு கட்டும் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டது,” என அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிபுணர் லிஸ் மெக்கௌன் கூறினார்.

இருப்பினும், இங்கிலாந்து பொருளியல் மீட்சி கண்டுவிட்டது என்பதைத் தற்போது உறுதி செய்ய முடியாது. 2023ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 விழுக்காடாகவும் அவ்வாண்டின் அதற்கு முந்தைய காலாண்டில் 0.1 விழுக்காடாகவும் இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றாலும் ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மந்தநிலையின் தொழில்நுட்ப வரையறைக்குள் தான் இன்னும் இங்கிலாந்து பொருளியல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!