காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகார்; சிங்கப்பூர் ஜோடிக்கு ஜோகூர் காவல்துறை விசாரணை அழைப்பு

ஜோகூர் பாரு: சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு வளாகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் 500 ரிங்கிட்டை (S$142) தங்களிடம் வற்புறுத்தி லஞ்சமாகப் பெற்றார்கள் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி புகார் சொன்னதை அடுத்து அவர்களிடம் கூடுதல் விவரங்கள் பெற ஜோகூர் காவல்துறை அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஐரீன் டியோ எனும் ஃபேஸ்புக் பயனாளர் தாங்கள் அபராத அழைப்பாணை பெறுவதைத் தவிர்க்கும் விதத்தில் இரு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் அந்தத் தொகையை லஞ்சமாகக் கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார் என்று ஜோகூர் மாநில காவல்துறை ஆணையாளர் எம். குமார் கூறினார்.

“மார்ச் 10ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு, சோதனைச் சாவடி 8Aயில், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் லாரிகளுக்கான தடத்தில் தங்கள் கார் தவறுதலாக சென்றதற்காக அந்த அபராத அழைப்பாணை கொடுக்கப்பட்டது.

“இப்போது வரை அந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எவ்வித புகாரும் தங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று ஆணையாளர் குமார் மார்ச் 14ஆம் தேதி தெரிவித்தார்.

விசாரணையில் உதவும் வகையில், ‘சேஜ்’ மற்றும் ‘ஐரீன் டியோ’ எனும் ஃபேஸ்புக் பயனாளர்களை அடையாளம் காணும்படி ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்திடம் அதிகாரபூர்வமாக உதவி கேட்டுள்ளோம்,” என்றும் திரு குமார் விவரித்தார்.

குற்றவியல் தண்டனைப் பிரிவு 384ன் கீழ் லஞ்சம் வாங்கிய இந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டு வரையிலான சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றுள் ஏதாவது இரண்டு தண்டனையாக விதிக்கப்படலாம்.

மலேசிய காவல்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையைப் பலப்படுத்த தங்கள் அதிகாரிகளிடையே குற்றவியல் ஒழுங்கின்மையைத் தடுக்க ஜோகூர் காவல்துறை கடப்பாடு கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட ஆணையாளர் குமார், குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் கடுமையான தண்டனையை எதிர்நோக்குவர்,” என்றும் விளக்கினார்.

திருவாட்டி டியோ, ஜோகூர் பாருவில் தனது காதலரிடமிருந்தும் தன்னிடமிருந்தும் காவல்துறை அதிகாரிகள் வற்புறுத்தி 500 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக மார்ச் 12ஆம் தேதி கூறினார்.

மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரான சேஜ், தங்கள் அனுபவத்தை விளக்கும் இரண்டு காணொளிகளைப் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்தி ஜோகூர் பாரு காவல்துறை அதிகாரிகள் பயணிகளிடமிருந்து பணம் பறிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவ்விரு பதிவுகளும் MY SG Road Trip – Your Malaysia Road Trip Guide எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

அந்தப் பதிவுகள் 600 முறைக்கு மேல் பகிரப்பட்டதாகவும் 800 முறைக்கு மேல் பார்க்கப்பட்டதாகவும் தி ஸ்டார் இணையத் தளத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!