சுனக் பதவி விவகாரம்: அமைச்சர்கள் கருத்து

சுனக் பதவி விவகாரம்: அமைச்சர்கள் கருத்து

1 mins read
a2432a41-7941-4258-a7a4-3081d5697b71
தொழிலாளர் கட்சியின் எழுச்சியைத் தடுக்க தற்காலிகப் பிரதமர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை இப்போதைக்கு மாற்ற வேண்டாம் என்று அவரது பழமைவாதக் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.

திரு சுனக் 16 மாதங்களுக்கு முன்னர் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் அக்கட்சியினர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அண்மையில் அவரை மாற்றம் தொடர்பான தகவல்கள் பரவின.

ஆயினும், தலைமைத்துவ மாற்றம் மேன்மேலும் அரசியல் பாதிப்பை உருவாக்கக்கூடும் என்று கட்சியினரிடம் சொல்லப்பட்டு உள்ளது. மாற்றம் வரக்கூடுமோ என்று பழமைவாதக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் யோசிக்கத் தொடங்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.

அண்மையக் காலமாக கேபினட் அமைச்சர்கள் தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர். 2025ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் திரு சுனக் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவாரா என்ற சந்தேகத்தை அது உருவாக்கியது.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எழுச்சியைத் தடுத்து நிறுத்தத் தற்காலிகப் பிரதமர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இருப்பினும், திரு சுனக்கின் அலுவலகம் இதுபற்றி கருத்துரைக்க மறுத்துவிட்டது.

ஆளும் கட்சிக்குச் சாதகமான அரசியல் முடிவுகளை திரு சுனக்கால் விரைந்து எடுக்க முடியவில்லை என்பதை உணர்த்தும் சில சம்பவங்களின் தொடர்ச்சியே அத்தகைய பேச்சுகளுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

வரி குறைப்பு தொடர்பான புதிய வாக்குறுதிகளை வெளியிடாதது, ஆளும் கட்சி நன்கொடையாளரின் இனவாதக் கருத்து தொடர்பான பூசலுக்கு முடிவு காணாதது போன்றவை அதனுள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்