ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் செய்தி பொய்யானது:கியோடோ

ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் செய்தி பொய்யானது:கியோடோ

1 mins read
e9faffab-1de6-400d-85b7-7be457b62faf
படம்: - தமிழ் முரசு

தோக்கியோ: ஜப்பானிய சுய-தற்காப்பு படைகளின் ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய செய்தி பொய்யானது என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்று அந்த விபத்து ஒய்டாவின் தெற்கு மாகாணத்தின் நிகழ்ந்தது என்று முன்னதாக செய்தியை வெளியிட்டது.

அந்த மாகாணத்தின் காவல்துறை, அங்குள்ள மலைப்பகுதியில் விமானம் ஒன்று தாழ்வாகப் பறப்பதைக் கண்டதாக கூறிய ஒருவரை அடையாளம் கண்டுள்ளது என கியோடோ  அறிவித்ததாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்