நிகழ் நேர மொழிபெயர்ப்பை விரிவாக்கம் செய்துள்ள சோல் மெட்ரோ

நிகழ் நேர மொழிபெயர்ப்பை விரிவாக்கம் செய்துள்ள சோல் மெட்ரோ

2 mins read
1ed0441e-e441-4360-b983-b0c95d4ba186
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்காக சோல் மெட்ரோ ரயில் நிறுவனம், நிகழ் நேர மொழிபெயர்ப்பை 11 நிலையங்களுக்கு விரிவடைய செய்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

சோல்: சோல் சுரங்க ரயில் சேவையின் இரு பெரும் ரயில் நிறுவனங்களில் ஒன்றான சோல் மெட்ரோ, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயன்பெறும் வகையில் அதன் நிகழ் நேர மொழிபெயர்ப்புச் சேவையை 11 நிலையங்களுக்கு விரிவடையச் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழிபெயர்ப்புகள் மூலம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் ரயில் நிலைய ஊழியர்களும் தங்கள் சொந்த மொழிகளில் தொடர்புகொள்ள முடியும். அப்போது அந்த இருதரப்பினரும் ஒளி ஊடுருவும் ‘ஓஎல்இடி’ திரையைப் பார்த்துப் பேச வேண்டும்.

அந்தத் திரையைப் பார்த்து பேசும் முறை 2023 டிசம்பரில் மியோங்-டோங் நிலையத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்தச் சோதனைக்குப் பிறகு, சோல் மெட்ரோ நிறுவனம் நிகழ் நேர மொழிபெயர்ப்பு சேவையை பிப்ரவரி மாதத்தில் மேலும் 10 நிலையங்களுக்கு விரிவடையச் செய்தது என்று ‘தி கொரிய ஹெரால்ட்’ நாளிதழ் தெரிவித்தது.

மொழிபெயர்ப்புச் சேவைகள் ஆங்கிலம், ஜப்பானிய, சீன, வியட்னாமிய, தாய்லாந்து, ஸ்பானிய, ஜெர்மானிய, அரேபிய மொழிகள் உட்பட 13 மொழிகளில் கிடைக்கும்.

மொழிபெயர்ப்புச் சேவைகளுடன், பயணிகள் தங்கள் பயணப் பாதையைத் திட்டமிடுதல், செல்லும் இடங்களைத் தேடுதல், பொருள் சேமிப்பு பற்றிய தகவல், சுரங்க ரயில் கட்டணங்கள், ரயில் மாற்றுச் சேவை, பயண நேரம் ஆகியவற்றுக்கும் ஒளி ஊடுருவும் ‘ஓஎல்இடி’ திரையைப் பயன்படுத்தலாம்.

“உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு மேலும் அணுகக்கூடிய, ஏதுவான சுரங்க ரயில் சேவையை வழங்கும் பொருட்டு, சோல் மெட்ரோ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர்களின் வசதியை மேம்படுத்த ஆன அனைத்தையும் செய்யும்.” என்று சோல் மெட்ரோயின் அதிகாரி ஒருவர் மார்ச் 14ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்